Posts

Showing posts from September, 2019

சகடா சூரவதம்

சகடா சூரவதம் குழந்தை கிருஷ்ணர் சற்று வளர்ந்த பின், குப்பிறப்படுக்கத் துவங்கினார். மற்றொரு விழாவை யசோதாவும் நந்தமகாராஜாவும் கொண்டாடினார்கள், அது கிருஷ்ணரின் முதலாவது பிறந்தநாள் விழாவாகும். அவர்கள் கொண்டாடிய கிருஷ்ண ஜெயந்தி விழா, இன்றும் அனைவராலும் கொண்டாடப்படுகிறது. அவ்விழாவுக்கு பெருந்திரளானவர்கள் வந்து விழாவில் குதூகலமாக கலந்துகொண்டனர். நேர்த்தியான வாத்தியக்குழு ஒன்று இசை பொழிய, கூடியிருந்த மக்கள் அதை ரசித்தனர். கற்றறிந்த பண்டிதர்கள் எல்லோரும் விழாவுக்கு அழைக்கப் பட்டிருந்தனர். பிராமணர்களான அவர்கள், கிருஷ்ணரின் நன்மை கருதி வேத பாராயணம் செய்தார்கள். யசோதை, நீராட்டப்பட்டு, அழகிய ஆடைகளால் அலங்கரிக்கப் பட்டிருந்த குழந்தை கிருஷ்ணரை மடியில் வைத்துக் கொண்டிருக்கும்போது, குழந்தை தூங்குவதுபோல் தோன்றியதால், அன்னை யசோதை அவரைப் படுக்கையில் கிடத்தினாள். உறவினர்களையும் நண்பர்களையும் அந்த சுபவேளையில் வரவேற்கும் பணியில் ஈடுபட்டிருந்ததால் யசோதை, குழந்தைக்கு பாலூட்ட மறந்து போனாள். எனவே, அவர் பசித்திருந்ததால் அழத் தொடங்கினார். அங்கே ஏற்பட்டிருந்த பற்பல ஓசைகளின் காரணமாக குழந்தை அழுதது, யசோதையின் கா...

குழந்தை ஸ்ரீ கிருஷ்ணர் தன் திருவாயில் பிரமாண்டங்களைக் காண்பித்தல்

குழந்தை ஸ்ரீ கிருஷ்ணர் தன் திருவாயில் பிரமாண்டங்களைக் காண்பித்தல் பலராமரும் கிருஷ்ணரும் குழந்தைகளாக இருந்தபோது, ஒருநாள் தம் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, எல்லாச் சிறுவர்களும் ஒன்றுகூடி அன்னை யசோதையிடம் வந்து, கிருஷ்ணர் மண்ணைத் திண்றுவிட்டதாக புகார் செய்தனர். இதைக்கேட்ட யசோதை, கிருஷ்ணரது வாயைத் திறக்குமாறு கூறினாள். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், அவரின் அன்னையான யசோதை அவ்வாறு பணித்தவுடன், அவர் ஒரு சாதாரண சிறுவன் செய்வதுபோல் தன் திருவாயைத் திறந்தார். அப்போது அன்னை யசோதை, தன் மகனின் திருவாயினுள் படைப்பின் முழுச்சிறப்பையும் கண்டாள். எல்லா திசைகளிலும் விரிந்திருந்த விண்வெளி, மலைகள், தீவுகள், சமுத்திரங்கள், கிரகங்கள், காற்று, நெருப்பு, சந்திரன், நட்சத்திரங்கள், முழுப் படைப்பின் பல்வேறான வடிவங்கங்கள் மற்றும் பிரபஞ்சப் படைப்புக்குத் தேவையான எல்லாம் தன் குழந்தையின் வாயினுள் இருப்பதைக் கண்டாள். அத்துடன் யசோதை கிருஷ்ணரைத் தன் மடியில் வைத்துக்கொண்டு அவருக்குப் பாலூட்டுவதையும் அந்த வாயினுள் கண்டு வியந்தாள். பகவானுடைய கிருபையால் மீண்டும் பழைய நிலையை அடைந்து தன் அன்புக் குழந்தையை தழ...

குழந்தை ஸ்ரீ கிருஷ்ணர் தன் திருவாயில் பிரமாண்டங்களைக் காண்பித்தல்

குழந்தை ஸ்ரீ கிருஷ்ணர் தன் திருவாயில் பிரமாண்டங்களைக் காண்பித்தல் பலராமரும் கிருஷ்ணரும் குழந்தைகளாக இருந்தபோது, ஒருநாள் தம் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, எல்லாச் சிறுவர்களும் ஒன்றுகூடி அன்னை யசோதையிடம் வந்து, கிருஷ்ணர் மண்ணைத் திண்றுவிட்டதாக புகார் செய்தனர். இதைக்கேட்ட யசோதை, கிருஷ்ணரது வாயைத் திறக்குமாறு கூறினாள். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், அவரின் அன்னையான யசோதை அவ்வாறு பணித்தவுடன், அவர் ஒரு சாதாரண சிறுவன் செய்வதுபோல் தன் திருவாயைத் திறந்தார். அப்போது அன்னை யசோதை, தன் மகனின் திருவாயினுள் படைப்பின் முழுச்சிறப்பையும் கண்டாள். எல்லா திசைகளிலும் விரிந்திருந்த விண்வெளி, மலைகள், தீவுகள், சமுத்திரங்கள், கிரகங்கள், காற்று, நெருப்பு, சந்திரன், நட்சத்திரங்கள், முழுப் படைப்பின் பல்வேறான வடிவங்கங்கள் மற்றும் பிரபஞ்சப் படைப்புக்குத் தேவையான எல்லாம் தன் குழந்தையின் வாயினுள் இருப்பதைக் கண்டாள். அத்துடன் யசோதை கிருஷ்ணரைத் தன் மடியில் வைத்துக்கொண்டு அவருக்குப் பாலூட்டுவதையும் அந்த வாயினுள் கண்டு வியந்தாள். பகவானுடைய கிருபையால் மீண்டும் பழைய நிலையை அடைந்து தன் அன்புக் குழந்தையை தழு...

நளகூவரன் மற்றும் மணிக்கிரீவன் சாப விமோசனம்

நளகூவரன் மற்றும் மணிக்கிரீவன் சாப விமோசனம் வெண்ணெய் திருடி, தயிர் பானையை உடைத்த கண்ணனை, தாய் யசோதை உரலில் கட்டினாள். மகனைக் கட்டிப் போட்டுவிட்டு அன்னை யசோதை வீட்டு வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினாள். அவ்வாறு மர உரலில் கட்டப்பட்டிருந்த கிருஷ்ணர், தன் முன் இரண்டு அர்ஜுன மரங்கள் நிற்பதைக் கவனித்தார். இந்த இரண்டு அர்ஜுன மரங்களும் பிரபலமான தேவர்களான நளகூவரனும் மணிக்கிரீவனும், தேவர்களின் பொக்கிஷதாரனும் சிவபெருமானின் பெரும் பக்தனுமான குவேரனின் இரு மகன்கள் ஆவார்கள். குவேரனின் இவ்விரு மைந்தர்களும் மது, மாது விடயங்களில் நாடியிருந்தனர். ஒரு முறை நாரதர் முன் இவ்விருவரும் இழி நிலையிலிருந்ததால் அவர்கள் இருவர் மீதும் கருணை கொண்டு, அவர்கள் நற்கதி அடைய வேண்டும் என்பதற்காக அவ்விருவரும் மரங்களாக, தேவர்களின் காலக் கணக்கின்படி நூறு ஆண்டுகளுக்கு இருந்து, பின்னர் முழுமுதற் கடவுளை நேருக்கு நேர் கண்டு நற்பேறு அடைய வேண்டுமென்று நாரதரால் சபிக்கப்பட்டிருந்தார்கள். அந்த இரு தேவர்களும் இரட்டை அர்ஜுன மரங்கள் என்று பெயர் பெற்ற மரங்களாக மாறி, நந்த மகாராஜாவின் அரண்மனை முற்றத்தில் தோன்றி வளாந்து, ஸ்ரீ கிருஷ்ணரை ...

பழக்காரிக்கு அனுக்கிரகம்

பழக்காரிக்கு அனுக்கிரகம் ஒரு நாள் ஒரு பழக்காரி நந்தகோபரின் வாயிலுக்கு வந்தாள். “பழம் வேண்டியவர்கள் வந்து வாங்கிக் கொள்ளலாம்” என்று அவள் கூவியதைக் கேட்ட குழந்தை கிருஷ்ணர், சிறிது தானியத்தைக் கையில் எடுத்துக் கொண்டு பழம் வாங்க சென்றார். அக்காலத்தில், கொடுக்கல் வாங்கல் பண்டமாற்று முறையில் நடைபெற்றது. அவரின் தாய் தந்தையர் அவ்வாறு பண்டமாற்றம் செய்ததைக் கவனித்திருந்து அவரும் அப்படியே செய்ய முற்பட்டார். ஆனால் அவரின் கைகள் மிகவும் சிறியவையாக இருந்ததால், தானியங்கள் கீழே சிதறின. இதைக் கண்ட பழக்காரி, குழந்தை கிருஷ்ணரின் அபார அழகில் மனதைப் பறிகொடுத்து, அவர் கையிலிருந்த தானியத்தின் அளவைப் பற்றிக் கவலைப்படாமல் பழங்களைக் கை நிறையக் குழந்தை கிருஷ்ணருக்கு கொடுத்தாள். அதே சமயத்தில் அப்பழக்காரியின் கூடை முழுவதும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அருளால், ஆபரணங்களாலும், பொன்னாலும் மணியாலும் நிறைந்து விட்டது. உண்மையான அன்பும் பாசமும் நிறைந்த, உள்ளத்தால் கொடுக்கப்பட்ட பழங்களுக்காக பகவான் அவளுக்கு செல்வம் கொடுத்து அனுக்கிரகித்தார்.

பகாசுர வதம்

பகாசுர வதம் ஆயர் குலச் சிறுவர்கள் எல்லோரும் தினமும் கன்றுகளுக்குத் தண்ணீர் காட்டுவதற்காக அவைகளை யமுனை நதிக்கரைக்கு அழைத்துச் செல்வது வழக்கம். கன்றுகள் யமுனை நதியில் தண்ணீர் குடிக்கும்போது சிறுவர்களும் நீர் அருந்துவார்கள். அவ்வாறு ஒரு நாள் நீர் அருந்திவிட்டு நதிக்கரையில் அவர்கள் அமர்ந்திருந்தபோது, உருவத்தில் வாத்தைப் போலவும், ஆனால் மலைபோல் பெரியதுமான ஒரு மிருகத்தைக் கண்டனர். அதன் அசாதாரன வடிவத்தைக் கண்டு அவர்கள் பயந்து போனார்கள். கம்சனின் நண்பனான அம்மிருகத்தின் பெயர் பகாசுரன் ஆகும். அவன் திடீரென்று கிருஷ்ணரைத் தன் கூரிய அலகுகளினால் தாக்கி, வேகமாக விழுங்கினான். கிருஷ்ணரை அரக்கன் விழுங்குவதைக் கண்ட பலராமரும் அவரது தோழர்களும் என்ன நடக்கப் போகிறதோ என்று பயந்துவிட்டார்கள். ஆனால் பகாசுர அரக்கன் ஸ்ரீ கிருஷ்ணரை விழுங்கியபோது தொண்டையில் ஏதோ எரிவது போல் உணர்ந்தான். பகவான் ஸ்ரீ கிருஷ்ஷரின் ஒளிமிகு சக்தியினாலேயே அரக்கனின் தொண்டையில் அவ்வாறு எரிச்சல் ஏற்பட்டது. உடனே அரக்கன் கிருஷ்ணரை வெளியில் உமிழ்ந்துவிட்டு, தன் கூரிய அலகுகளால் அவரைக் குத்திக் கொல்ல முயன்றான். அப்போது பகவான் ஸ்ரீ கிருஷ்ணர...

அகாசுர வதம்

அகாசுர வதம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தம் தோழர்களுடன் பால்ய லீலைகளில் திளைத்திருந்த போது, அகாசுரன் என்ற அரக்கன் மிகவும் பொறுமை அற்று இருந்தான். கிருஷ்ணர் விளையாடியதை அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எனவே, அந்தச் சிறுவர்கள் எல்லோரையும் கொல்லும் எண்ணத்துடன், அவன் அவர்களின் முன்பு தோன்றினான். வானுலகத்தினர் எல்லோரும் பயப்படும் அளவிற்கு அவன் பயங்கரமான தோற்றம் உடையவனாக இருந்தான். அகாசுரன் என்ற அந்த அரக்கன் பூதகி மற்றும் பகாசுரனின் சகோதரன் ஆவான். கிருஷ்ணர், தன் சகோதரனையும் சகோதரியையும் கொன்றதற்கு பழி வாங்குவற்காக, கிருஷ்ணரையும் அவரது நண்பர்களையும் கன்றுகளையும் கொல்ல வேண்டுமென்று வந்தான். அவன் கம்சனின் நண்பனும் ஆவான். உடனே அசுரன், மஹிமா எனும் யோக சக்தியின் உதவியால் தன் உருவத்தை எட்டு மைல் அளவுக்குப் பெரிதாக்கிக் கொண்டு, மிகவும் பெரிய உடலை உடைய பாம்பின் வடிவத்தை எடுத்தான். அந்த அதிசய உடலை எடுத்தவுடன், தனது வாயை ஒரு பெரிய மலைக்குகையின் அளவிற்குத் திறந்தான். ஒரே சமயத்தில் கிருஷ்ணரையும் பலராமரையும் மற்றைய சிறுவர்களையும் சேர்த்து விழுங்கத் திட்டமிட்டான். மிப்பெரிய பாம்பின் உருவத்தை மேற்கொண்ட...

சிறுவர்களையும் கன்றுகளையும் பிரம்மா திருடுதல்

சிறுவர்களையும் கன்றுகளையும் பிரம்மா திருடுதல் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அகாசுரனை வதம் செய்ததும் தேவர்கள் சந்தோசத்தால் எழுப்பிய மங்களகரமான இனிய ஒலி அதிர்வுகள், உயர்நிலை கிரகங்களை எட்டியபோது, அவற்றைக் கேட்ட பிரம்மா, என்ன நடந்தது என்று பார்ப்பதற்காக கீழே இறங்கி வந்தார். அசுரன் கொல்லப்பட்டு கிடப்பதைக் கண்டு, முழுமுதற் கடவுளின் அசாதாரண மற்றும் மகிமை மிக்க லீலைகளைக் கண்டு வியந்தார். அகாசுர வதம் நடைபெற்ற போது கிருஷ்ணரும் அவருடைய நண்பர்களும் ஐந்து வயதிற்கு உட்பட்ட சிறுவர்களாக இருந்தனர். யமுனை நதிக்கரையில் கன்றுகள் புல் மேய, கிருஷ்ணரும் அவரது நண்பர்களும் மதிய உணவை உண்பதற்காக, கிருஷ்ணர் நடுவில் அமர, அவரைச் சுற்றி மற்றவர்கள் உட்கார்ந்தனர். அனைவரும் உணவு உண்பதற்கு ஆரம்பிக்கும் போது அருகாமையில் புல் மேய்ந்து கொண்டிருந்த கன்றுகள் புதிய புல்லைத் தேடி காட்டுக்குள் வெகு தூரம் சென்று விட்டன. அப்போது கிருஷ்ணர், தன் நண்பர்கள் சாப்பிடுவதை விட்டு விட்டு கன்றுகளைத் தேடப் போவதை விரும்பவில்லை. எனவே அவர், தன் நண்பர்களைத் தொடர்ந்து சாப்பிடும் படியாகவும் தான் கன்றுகளைத் தேடிப் போவதாகவும் கூறிச் சென்றார். ...

தேனுகாசுர வதம்

தேனுகாசுர வதம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரினதும் பலராமரினதும் நண்பர்களான, ஸ்ரீ தாமா, ஸூபலா, ஸ்தோக கிருஷ்ணா ஆகியோர் கிருஷ்ணரையும் பலராமரையும் பார்த்துக் கூறினார்கள்:அன்பான பலராமரே, நீர் மிகுந்த சக்தி வாய்ந்தவர். உமது கைகள் மிகுந்த பலமுடையவை. அன்பான கிருஷ்ணா, தொல்லை தரும் பல வகையான அரக்கர்களைக் கொல்வதில் நீர் வல்லவர். விருந்தாவனத்திற்கு அருகில் தாளவனம் எனும் ஒரு பெரிய காடு உள்ளது. அந்தக் காட்டில் பல ஈச்ச மரங்கள் உள்ளன. அவற்றில் பழங்கள் மிகுதியாக உள்ளன. ஆனால் பெரிய அரக்கனான தேனுகாசுரன் அங்கு இருப்பதால் அங்கு போவது மிகவும் கடினம். அந்த அசுரனும் அவனது நண்பர்களும் கழுதையின் உருவத்தில் அங்கு இருக்கிறார்கள். அதனால் பழங்களை பறிக்க யாரும் அந்த மரங்களை அணுக முடியாது. உங்களைத் தவிர வேறுயாரும் பயமின்றி அங்கு செல்ல முடியாது. அந்த அசுரர்களைக் கொல்லக் கூடியவர்கள் உங்களைத் தவிர யாரும் இல்லை. அங்கு மிருகங்கள் கூடப் போவதில்லை. பறவைகள் அங்கு உறங்குவதில்லை. அவையெல்லாம் அங்கிருந்து சென்று விட்டன. அந்தப் பழங்களை பறித்து உண்டு அவற்றின் சுவையை அனுபவித்தவர்கள் யாரும் இல்லை. நாம் எல்லோரும் அங்கு சென்று பழங்களை உண...

காளிங்கனின் மீது பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நடனமாடுதல்

காளிங்கனின் மீது பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நடனமாடுதல் யமுனை நதியின் அடியில் ஒரு பெரிய ஏரி இருந்தது. அந்த ஏரியில் காளிங்கன் என்ற மிகப் பெரிய விஷப் பாம்பு ஒன்று வசித்து வந்தது. அதன் விஷம் காரணமாக அந்தப் பகுதி முழுவதும் தூய்மை கெட்டு, நச்சுக் கலந்திருந்தது. அங்கு ஒரு பறவை பறந்தால் அது உடனே மடிந்து கீழே விழும். யமுனையில் இருந்து வெளிவந்த நச்சு வாயுவின் பாதிப்பால் யமுனைக் கரையிலிருந்த மரங்களும் புற்களும் பட்டுப் போய்விட்டது. அப்பெரிய பாம்பின் விஷத்தால் ஏற்பட்ட கேட்டைக் கிருஷ்ணர் கவனித்தார். விருந்தாவனத்தை அடுத்து ஓடிய நதி முழுவதும் உயிருக்கு அபாயம் விளைவிக்கக் கூடியதாக இருந்தது. உலகில் கேடு விளைவிக்கும் சக்திகளைக் களைவதற்கென்றே அவதரித்துள்ள ஸ்ரீகிருஷ்ணர், யமுனை நதியின் கரையிலிருந்த ஒரு பெரிய கடம்ப மரத்தின் மீது ஏறினார். கடம்பம் எனும் வட்டமான மஞ்சள் நிற மலர், பொதுவாக விருந்தாவனப் பகுதியில் மட்டும் காணப்படும் ஒரு மலர் வகை. மரத்தின் உச்சியில் ஏறியபின் அவர் தன் அரைக் கச்சையை இறுக்கிக் கொண்டு, மல்யுத்தம் செய்பவனைப் போல் கைகளை ஆட்டிக் கொண்டு நச்சு மிகுந்த அந்த ஏரியினுள் குதித்தார். பகவான் ஸ்ரீ...

காட்டுத் தீயை அணைத்தல்

காட்டுத் தீயை அணைத்தல் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் காலிங்கன் மீது நடனமாடிவிட்டு யமுனை நதியில் இருந்து வெளி வந்தபோது இரவாகி விட்டதால் விருந்தாவன வாசிகளும், பசுக்களும், கன்றுகளும் மிகவும் களைப்படைந்து, யமுனை நதிக் கரையிலலேயே ஓய்வெடுத்துக் கொள்வதென்று தீர்மானித்தார்கள். இவ்வாறு அவர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது, நள்ளிரவில் திடீரென்று காட்டில் நெருப்புப் பற்றிக் கொண்டது. விரைவில் விருந்தாவன வாசிகள் எல்லோரும் நெருப்புக்கு இரையாகி விடக்கூடுமென்ற அச்சம் ஏற்பட்டது. நெருப்பின் உஷ்ணம் அவர்களைத் தகிக்கத் தொடங்கியதும் அவர்கள் முழுமுதற் கடவுளான கிருஷ்ணரிடம், அப்போது அவர் ஒரு குழந்தையாக விளையாடிக் கொண்டிருந்த போதும், சரணடைந்தார்கள். அவரிடம் அவர்கள் கூறினார்கள் அன்பான கிருஷ்ணா, முழுமுதற் கடவுளானவரே, பலத்தின் சிகரமான பலராமரே, கோரமான இந்த நெருப்பு எல்லாவற்றையும் அழிக்கக் கூடியது. அதிலிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள். உங்களைத் தவிர எங்களுக்கு வேறு புகலிடம் இல்லை. இந்த நாசகாரத் தீ எங்களை எல்லாம் விழுங்கி விடும். இவ்வாறு அவர்கள் கிருஷ்ணரின் பாதகமலங்களைத் தவிர வேறு புகலிடம் இல்லையென்று கூறி, அவரிடம் ப...

பிரலம்பாசுர வதம்

பிரலம்பாசுர வதம் ஒரு நாள் பகவான் ஸ்ரீகிருஷ்ணரும் பலராமரும் மற்றும் கோபாலச் சிறுவர்களும் விருந்தாவனத்தின் காட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது, பிரலம்பாசுரன் என்ற பெயருடைய அரக்கன் அவர்களிடையே புகுந்து பலராமரையும் கிருஷ்ணரையும் கொல்ல விளைந்தான். கிருஷ்ணர் அப்போது ஆயர்குலச் சிறுவனாக விளையாடிக் கொண்டிருந்தார் என்றாலும், முழுமுதற் கடவுளாகிய அவர் முக் காலங்களையும் உணர்ந்தவர் அல்லவா? எனவே, பிரலம்பாசுரன் அவர்களிடையே வந்து புகுந்ததும் அவனை எப்படிக் கொல்வதென்று முடிவெடுத்தார். வெளிப்படையாக, ஒரு நண்பனைப் போல் வரவேற்று,அன்பான நண்பனே, எங்களின் விளையாட்டில் கலந்து கொள்ள நீயும் வந்திருப்பது நல்லதாயிற்று என்று கூறி, நண்பர்களை அழைத்து,இப்போது நாம் ஜோடி ஜோடியாக விளையாடலாம், ஒருவருக்கொருவர் சவால் விடலாம் என்று கூறினார். சிறுவர்கள் ஒன்று கூடி சிலர் கிருஷ்ணரின் பக்கமும், சிலர் பலராமரின் பக்கமும் சேர்ந்து கொண்டார்கள். எதிர்க் கட்சிகள் ஜோடி ஜோடியாக யுத்தம் செய்ய வேண்டும். வென்றவர்களைத் தோற்றவர்கள் முதுகில் சுமக்க வேண்டும் என்பது நிபந்தனை. விளையாடியபடியே அவர்கள் பசுக்களையும் கவனித்துக் கொண்டார்கள். இவ்வா...

யாகங்கள் நடத்திய அந்தணர்களின் மனைவியருக்கு முக்தி அளித்தல்

யாகங்கள் நடத்திய அந்தணர்களின் மனைவியருக்கு முக்தி அளித்தல் வழக்கம்போல கிருஷ்ணரும் பலராமரும் அவர்களது நண்பர்களுடன் யமுனை நதிக் கரைக்குச் சென்றிருந்தபோது, ஆயர் சிறுவர்கள் காலை உணவு உண்டிராததால் மிகவும் பசியாக இருந்தார்கள். அவர்கள் கிருஷ்ணரையும் பலராமரையும் அணுகி இவ்வாறு கூறினார்கள்: “அன்பான கிருஷ்ணா, பலராமா, நாங்கள் இன்று பசியாக இருக்கிறோம். எங்கள் பசியைப் போக்குவதற்கான உபாயம் ஏதாவது கூறுங்கள்”. என்று கூறினார்கள். நண்பர்கள் இவ்வாறு வேண்டிக் கொண்டபோது கிருஷ்ணரும் பலராமரும் அச்சமயம் யாகங்கள் நடத்திக் கொண்டிருந்த சில பிராமணர்களின் மனைவியரின் மீது கருணை கொண்டார்கள். அம்மனைவியர்கள் பிரபுவின் சிறந்த பக்தைகள். இந்த சந்தர்பத்தை பயன்படுத்திக் கொண்டு, கிருஷ்ணர் அவர்களை ஆசீர்வதிக்க விரும்பினார். கிருஷ்ணர் நண்பர்களிடம் கூறினார்:அன்பான நண்பர்களே, பக்கத்திலுள்ள பிராமணர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களிடம் உணவு கேளுங்கள். இப்போது அவர்கள் வேத முறைப்படியானஆங்கிரஸ எனும் யாகங்களை நடத்துவதில் ஈடுபட்டிருக்கிறார்கள். அந்தப் பிராமணர்கள் வேதப் பண்களை இசைப்பதில் மும்முரமாக இருக்கிறார்கள். ஆனால், வேத அறிவ...

கோவர்த்தன கிரியைப் பூஜித்தல்

 கோவர்த்தன கிரியைப் பூஜித்தல் விருந்தாவன வாசிகள் இந்திரனைத் திருப்திப் படுத்துவதற்காக ஒரு யாகத்தை நடத்த ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள். இந்திரனைத் திருப்திப் படுத்தினால் மழை வருமென்று நம்பப்பட்டது. இதைப் பற்றிக் கேள்விப்பட்ட கிருஷ்ணர், தன் தந்தை நந்தமகாராஜாவிடம் அதுபற்றிப் பணிவுடன் கேட்டார். நந்தமகாராஜா சிறிது நேரம் மௌனமாக இருந்தார். யாகத்தின் நுணக்கங்களைச் சிறுவனான கிருஷ்ணரால் புரிந்துகொள்ள முடியாதென்று அவர் நினைத்தார். ஆனால் கிருஷ்ணர் விடவில்லை. அந்த விபரங்களை விரிவாகக் கூறுமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு நந்தமகாராஜா கூறினார்: “இச்சடங்கு பரம்பரை பரம்பரையாகச் செய்யப்பட்டு வருகிறது. மழை இந்திரனின் கருணையால் ஏற்படுவதாலும், மேகங்கள் அவரது பிரதிநிதிகள் ஆகையினாலும், தண்ணீர் நமது வாழ்வுக்கு மிக முக்கியமானதாலும், மழையில்லாமல் நாம் பயிரிடவோ, தானியங்களை விளைவிக்கவோ இயலாது. மழை பெய்யாவிட்டால் நாம் வாழ முடியாது. எனவேதான், இந்த யாகம் செய்யப்படுகிறது”, என்று நந்தமகாராஜா கூறினார். இதைக் கேட்டபின் கிருஷ்ணர் பேசிய விதம் இந்திரனை மிகுந்த கோபத்துக்கு உள்ளாக்கியது. யாகத்தை நடத்த வேண்டாமென க...

கோவர்த்தன கிரியைக் குடையாகப் பிடித்தல்

கோவர்த்தன கிரியைக் குடையாகப் பிடித்தல் விருந்தாவனத்தின் ஆயர்கள் இந்திரனுக்காக ஏற்பாடு செய்திருந்த யாகத்தைக் கிருஷ்ணர் தடுத்து விட்டார் என்று அறிந்தபோது இந்திரன் மிகுந்த கோபம் கொண்டு, தன் கோபத்தை விருந்தாவன வாசிகளின் மீது காட்டினான். யாகம் நிறுத்தப்பட்டதற்கு கிருஷ்ணரே காரணம் என்பதை அறிந்திருந்த போதிலும், பழியை நந்தமகாராஜாவின் தலைமையிலான ஆயர்களின் மீது தீர்க்க முற்பட்டான். பலவகையான மேகங்களின் அதிபதியான இந்திரன், ஸாங்வர்த்தக என்ற மேகத்தை அழைத்தான். இந்த மேகம் பிரபஞ்சம் முழுவதையும் அழிப்பதற்கான தேவை ஏற்படும் போதுதான் அழைக்கப்படும். விருந்தாவனத்தின் மேல் படர்ந்து அப்பகுதி முழுவதையும் பெரும் வெள்ளத்தில் மூழ்கடிக்கும் படி இந்திரன் ஸாங்வர்த்தக மேகத்துக்கு கட்டளையிட்டபோது அப்பொறுப்பை ஏற்க அவை மிகவும் அஞ்சின. ஆனால் தேவேந்திரன், நீங்கள் முன்னேறிச் செல்லுங்கள் நானும் என் யானை மீது ஆரோகணித்து பெரும் புயல்கள் புடை சூழ உங்களுடன் வருகிறேன். விருந்தாவன வாசிகளைத் தண்டிப்பதில் என் சக்தி முழுவதையும் செலவிடத் தீர்மானித்திருக்கிறேன். என்று உறுதியளித்து மேகங்களை ஊக்குவித்தான். இந்திரனின் கட்டளைப்பட...

வருணனின் பிடியிலிருந்து நந்த மகாராஜாவை விடுவித்தல்

 வருணனின் பிடியிலிருந்து நந்த மகாராஜாவை விடுவித்தல் கோவர்த்தன பூஜை அமாவாசையன்று நடைபெற்றது. அதன் பின் இந்திரன் ஏழு நாட்களுக்குப் பலத்த மழையும் புயலும் விழைவித்தான். சுக்ல பஷத்தின் ஒன்பது நாட்களுக்குப் பின் பத்தாவது நாள் தேவேந்திரன் கிருஷ்ணரை வழிபட்டபின் எல்லாம் திருப்தியாக முடிவடைந்தது. பின், பதினொன்றாம் நாள் ஏகாதசி வந்தது. அன்று முழுவதும் நந்தமகாராஜா உபவாசமிருந்து, மறுநாள் துவாதசியன்று அதிகாலை யமுனை நதியில் நீராடச் சென்றார். அவர் நதியின் ஆழமான இடத்துக்குச் சென்றபோது வருணதேவனின் ஆள் ஒருவன் அவரைத் தடுத்து, வருணதேவனின் முன்பு கொண்டு போய் நிறுத்தினான். தவறான நேரத்தில் நதியில் நீராடியதாக நந்தரின் மேல் குற்றம் சாட்டப்பட்டது. வான சாஸ்திரத்தின் படி அவர் நீராடியவேளை அசுர வேளையாகும். அதிகாலையில் சூரியோதயத்துக்கு முன்பு நதியில் நீராட வேண்டுமென்று விரும்பிய நந்தர் எப்படியோ, மேலும் முன்பாகவே வந்துவிட்டதால், அசுப வேளையில் நீராடி விட்டார். அதனால் அவர் வருணனின் சிறையில் அடைக்கப் பட்டார். வருணனின் ஆட்கள் நந்த மகாராஜாவைப் பிடித்துச் சென்றபோது அவரது நண்பர்கள், கிருஷ்ணரையும் பலராமரையும் கூவி அழ...

வித்யாதரன் முக்தி

வித்யாதரன் முக்தி ஒரு சமயம் நந்தமகாராஜாவின் தலைமையிலான கோபாலர்கள் அம்பிகா வனம் சென்று சிவராத்திரி பூஜை செய்ய விரும்பினார்கள். அம்பிகா வனம் குஜராத் மாநிலத்தில் உள்ளது. அது சரஸ்வதி நதிக்கரையில் உள்ளதாகச் சொல்லப்படுவதுண்டு. சரஸ்வதி நதியின் கரையிலிருந்த அம்பிகா வனத்துக்கு நந்தமகாராஜாவும் ஆயர்களும் சென்றார்கள். அம்பிகா வனத்தை அடைந்ததும் விருந்தாவன ஆயர்கள் முதலில் சரஸ்வதி நதியில் நீராடினார்கள். புண்ணிய தலங்களுக்கு செல்பவர்கள் முதலில் அங்குள்ள தீர்த்தத்தில் நீராடுவார்கள். சில சமயங்களில் அவர்கள் முடியிறக்குவதும் உண்டு. நீராடுவது முதற் கடமை. நீராடிய பின் அவர்கள் அங்குள்ள தெய்வங்களை வணங்கித் தானங்கள் வழங்குவார்கள். விருந்தாவனத்திலிருந்து வந்திருந்த ஆயர்கள், தங்க ஆபரணங்களையும் அழகிய மாலைகளையும் அணிந்திருந்த பசுக்களை பிராமணர்களுக்குத் தானமாக வழங்கினார்கள். நந்தமகாராஜாவும் மற்றவர்களும் அன்றிரவை சரஸ்வதி நதியின் கரையில் கழித்தார்கள். அவர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது அருகிலிருந்த வனத்திலிருந்து வந்த ஒரு பெரிய பாம்பு நந்தரைப் பிடித்து விழுங்கத் தொடங்கியது. நந்தர் பரிதாபமாகக் கத்தலானார்: எ...

சங்காசுர வதம்

 சங்காசுர வதம் வித்யாதரன் முக்திக்குப் பின் ஒரு நாள் இனிமையான இரவில் எண்ணற்ற பலசாலிகளான பலராமரும் கிருஷ்ணரும் விருந்தாவனக் காட்டிக்குச் சென்றார்கள். அவர்களுடன் விரஜ பூமியின் நங்கையரும் சென்றிருந்தார்கள். அந்நங்கையர் நேர்த்தியான ஆடைகளை அணிந்திருந்தார்கள். சந்தனம் பூசப் பெற்று, மலர்களால் தம்மை அலங்கரித்திருந்தார்கள். ஆகாயத்தில் சந்திரன், நட்சத்திரங்கள் புடை சூழப் பிரகாசித்துக் கொண்டிருந்தான். சூழலின் இனிமையில் கிருஷ்ணரும் பலராமரும் இனிமையாகப் பாடினார்கள். அப்போது குபேரனின் நண்பனான ஒரு அசுரன் அங்கு தோன்றினான். அவன் தலையில் சங்கு வடிவிலான விலை உயர்ந்த மணியைத் தரித்திருந்ததால் அவனுக்கு சங்காசுரன் என்ற பெயர் வழங்கியது. குபேரனின் இரு மகன்கள் செல்வத்தால் செருக்கடைந்து நாரத முனியை அசட்டை செய்தது போல் சங்காசுரனும் செல்வச் செருக்கு காரணமாக, கிருஷ்ணரையும் பலராமரையும் ஆயர்குலச் சிறுவர்களென எண்ணினான். சங்காசுரன், தான் செல்வம் மிகுந்தவனும், குபேரனின் நண்பனுமாகையால் அங்கிருந்த விரஜ நங்கையர்களை அனுபவிக்க எண்ணி அப்பெண்களைக் கைப்பற்ற விரும்பினான். அவர்களிடையே அவன் தோன்றி, அப்பெண்களை வடக்கு த...

வியோமாசுர வதம்

வியோமாசுர வதம் ஒரு நாள் காலையில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் அவரது நண்பர்களும் கோவர்த்தன கிரியின் உச்சியில் விளையாடுவதற்காகச் சென்றார்கள். கள்வர்களும் காவலர்களுமாக அவர்கள் நடித்து விளையாடினார்கள். சிலர் கள்வர்களாகவும் சிலர் ஆட்டுக் குட்டிகளாகவும் பங்கேற்றார்கள். இவ்வாறு அவர்கள் குழந்தைகளாக விளையாடி மகிழ்கையில் வியோமாசுரன் என்ற பெயருடைய ஒரு அரக்கன் அங்கு தோன்றினான். வியோமாசுரன் என்றால் ஆகாயத்தில் பறக்கும் அசுரன் என்று பொருள். அவன் மற்றொரு மாபெரும் அசுரனான மாயா என்பவனின் மகன். இவ்வரக்கர்கள் பல மாயச் செயல்களைப் புரியக் கூடியவர்கள். வியோமாசுரன் இடைச் சிறுவனாக உருவம் தாங்கி விளையாட்டில் காவலர்களாக நடித்த சிறுவர்களோடு கலந்து கொண்டு, ஆட்டுக் குட்டிகளாக நடித்த பல சிறுவர்களைக் கவர்ந்து சென்றான். ஒருவர் பின் ஒருவராகப் பல சிறுவர்களை அசுரன் கடத்திச் சென்று, அவர்களை மலைக் குகைகளினுள் பதுக்கி வைத்து, கற்களால் குகைகளின் வாய்களை மூடிவிட்டான். அசுரனின் தந்திரத்தைக் கிருஷ்ணர் அறிந்து கொண்டார். உடனே அவர், சிங்கம் ஆட்டுக் குட்டியைப் பிடிப்பது போல் அசுரனைப் பிடித்து விட்டார். அவரின் பிடியிலிருந்து ...

வியோமாசுர வதம்

வியோமாசுர வதம் ஒரு நாள் காலையில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் அவரது நண்பர்களும் கோவர்த்தன கிரியின் உச்சியில் விளையாடுவதற்காகச் சென்றார்கள். கள்வர்களும் காவலர்களுமாக அவர்கள் நடித்து விளையாடினார்கள். சிலர் கள்வர்களாகவும் சிலர் ஆட்டுக் குட்டிகளாகவும் பங்கேற்றார்கள். இவ்வாறு அவர்கள் குழந்தைகளாக விளையாடி மகிழ்கையில் வியோமாசுரன் என்ற பெயருடைய ஒரு அரக்கன் அங்கு தோன்றினான். வியோமாசுரன் என்றால் ஆகாயத்தில் பறக்கும் அசுரன் என்று பொருள். அவன் மற்றொரு மாபெரும் அசுரனான மாயா என்பவனின் மகன். இவ்வரக்கர்கள் பல மாயச் செயல்களைப் புரியக் கூடியவர்கள். வியோமாசுரன் இடைச் சிறுவனாக உருவம் தாங்கி விளையாட்டில் காவலர்களாக நடித்த சிறுவர்களோடு கலந்து கொண்டு, ஆட்டுக் குட்டிகளாக நடித்த பல சிறுவர்களைக் கவர்ந்து சென்றான். ஒருவர் பின் ஒருவராகப் பல சிறுவர்களை அசுரன் கடத்திச் சென்று, அவர்களை மலைக் குகைகளினுள் பதுக்கி வைத்து, கற்களால் குகைகளின் வாய்களை மூடிவிட்டான். அசுரனின் தந்திரத்தைக் கிருஷ்ணர் அறிந்து கொண்டார். உடனே அவர், சிங்கம் ஆட்டுக் குட்டியைப் பிடிப்பது போல் அசுரனைப் பிடித்து விட்டார். அவரின் பிடியிலிருந்து...

கேசி வதம்

கேசி வதம் பகவான் ஸ்ரீகிருஷ்ணரைக் கொல்வதற்காக கம்சன் தன் நண்பனான கேசி என்ற அரக்கனை விருந்தாவனம் செல்லுமாறு கட்டளையிட்டான். கம்சனின் கட்டளையைப் பெற்றதும் கேசி அசுரன் பயங்கரமான ஒரு குதிரையின் வடிவத்தை மேற்கொண்டு விருந்தவனப் பகுதிக்குள் நுழைந்தான். பிடரி மயிர் காற்றில் பறக்க, அவன் உரக்க கனைத்த ஒலி கேட்டு உலகமே நடுங்கியது. விருந்தாவன வாசிகள் பயந்து நடுங்கும்படி அவன் கனைத்து, வாலை ஆகாயத்தில் பெரும் மேகம் போல் சுழற்றியதைக் கிருஷ்ணர் கண்டார். குதிரை வடிவிலிருந்த அசுரன் தன்னை போருக்கு அழைக்கிறான் என்பதைக் கிருஷ்ணர் புரிந்து கொண்டார். அவர் அசுரனைப் போரிட அழைத்த போது அவன் சிங்கம் போல் கர்ஜித்தபடி அவரை நோக்கி முன்னேறினான். மிகுந்த வேகத்துடன் முன்னேறிய கேசி, தன் பலம் மிக்க, கற்களைப் போல் கடினமான கால்களால் கிருஷ்ணரை மிதித்துக் கொல்ல முயற்சித்தான். ஆனால் கிருஷ்ணர் உடனே அவனுடைய கால்களைப் பற்றிக் கொண்டு அவனைத் திகைக்கச் செய்தார். பின் கேசியினுடைய கால்களைப் பிடித்த படி அவனைச் சுழற்றினார். சில சுற்றுக்களக்குப் பின், கருடன் பெரிய பாம்பை எறிவது போல், கிருஷ்ணர் கேசியை நூறு கஜ தூரத்துக்கு அப்பால் எறிந...

அக்ரூரர் விருந்தாவனத்திலிருந்து திரும்பும்போது யமுனை நதியிலிருந்த விஷ்ணு லோகத்தைக் காணல்

அக்ரூரர் விருந்தாவனத்திலிருந்து திரும்பும்போது யமுனை நதியிலிருந்த விஷ்ணு லோகத்தைக் காணல் கம்சன் தனுர் யாகம் ஒன்றினைச் செய்வதற்கு ஏற்பாடு செய்திருந்தான். அதற்காக பகவான் ஸ்ரீ கிருஷ்ணரையும் பலராமரையும் மதுராவிற்கு அழைத்து வருமாறு அக்ரூரரை அனுப்பினான். கிருஷ்ணரும் பலராமரும் மதுராவிற்கு வந்தபின் அவர்களைக் கொல்வதென்று முடிவெடுத்தான். அக்ரூரர் கம்சனின் நம்பிக்கைக்குரிய நண்பனாக இருந்தார். அதேவேளை அவர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மிக உயர்ந்த பக்தருமாவார். விருந்தாவனம் சென்ற அக்ரூரர் கிருஷ்ணரையும் பலராமரையும் மதுராவிற்கு கம்சனால் அழைக்கப்பட்டிருந்த செய்தியைக் கூறினார். கிருஷ்ணரும் பலராமரும் மதுராவிற்குச் செல்கிறார்கள் என்பதை அறிந்த கோபியர்கள் கவலையடைந்தார்கள். தம்மை விட்டுக் கிருஷ்ணர் பிரிவதை எண்ணி மிகவும் வருந்தினார்கள். கிருஷ்ண, பலராமர் ஆகியோருடன் மேலும் சில கோபாலர்களும் தனுர் யாகத்தைக் காண்பதற்காக மதுரா செல்லப் புறப்பட்டார்கள். சூரியன் உதயமானதும் அக்ரூரர் நீராடி முடித்து, தேரில் ஏறி, கிருஷ்ணருடனும் பலராமருடனும் மதுராவுக்குப் புறப்பட்டார். நந்த மகாராஜாவும் மற்ற ஆயர்களும் மாட்டு வண்டிகளில் ...

பூ வியாபாரிக்கு அனுக்கிரகம் அளித்தல்

பூ வியாபாரிக்கு அனுக்கிரகம் அளித்தல்' பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் மதுராவின் வீதிகளில் தொடர்ந்து சென்று கொண்டிருந்தபோது சுதாமா என்ற பெயருடைய பூக்கடைக் காரரிடம் சென்றார்கள். அவர்கள் கடையை அணுகியதும் பூ வியாபாரி வெளியே வந்து மிகுந்த பக்தியுடன் அவர்களின் காலில் விழுந்து வணங்கினார். பின், கிருஷ்ணரையும் பலராமரையும் தகுந்த ஆசனங்களில் இருக்கச் செய்து, உதவியாளர்களைப் பூவும் தாம்பூலமும் கொண்டு வரும்படி பணித்தார். வியாபாரியின் வரவேற்பால் கிருஷ்ணர் மிகவும் திருப்தி அடைந்தார். மிகுந்த பணிவுடன் பூ வியாபாரி பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் பிரார்த்தித்தார்: அன்பான பிரபுவே, நீர் என் இருப்பிடத்துக்கு வந்திருப்பதால் என் மூதாதையர்களும், வணக்கத்துக்குரிய பெரியவர்களும் முக்தி அடைந்தவர்களாக வேண்டும். இப் பிரபஞ்சத்தில் காரணங்களுக் கெல்லாம் காரணமானவர் நீரே. ஆனால் உமது பக்தர்களைப் பாதுகாத்து, அசுரர்களை அழித்து, இவ்வுலக வாசிகளுக்கு நன்மையளிப்பதற்காக உமது சக்திகளுடன் நீர் வந்திருக்கிறீர். OLYMPUS DIGITAL CAMERA நண்பரென்ற முறையில் எல்லா உயிர் வாழிகளையும் சமமாக நோக்குகிறீர். நீர் பரமாத்மா. நண்பன் –...

கம்சனின் வேலையாளை சிரச்சேதம் செய்தல்

கம்சனின் வேலையாளை சிரச்சேதம் செய்தல் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் மதுரா நகரின் வீதிகளில் சென்று கொண்டிருந்தபோது ஒரு சலவைத் தொழிலாளியைக் கண்டார்கள். அவன் உடுப்புகளுக்குச் சாயம் போடுபவன். கிருஷ்ணர் அவனிடம் சில நேர்த்தியாகச் சாயம் போடப்பட்ட உடுப்புகளைக் கொடுத்தால் அவனுக்கு எல்லா நலன்களும் பெருகுமென்று அவனிடம் கூறினார். கிருஷ்ணரிடம் உடுப்புக்கள் இல்லையென்று இல்லை. அவருக்கு உடுப்புக்கள் தேவைப்படவுமில்லை. ஆனால் அவர் வேண்டுவதைக் தர எல்லோரும் தயாராக இருக்க வேண்டுமென்பதை வலியுறுத்துவதற்காகவே அவ்வாறு கேட்டார். கிருஷ்ணர் வேண்டுவதைத் தர எல்லோரும் முன் வர வேண்டும். அதுவே கிருஷ்ண உணர்வு. துரதிஷ்ட வசமாக அவன் கம்சனின் வேலையாளாக இருந்ததால் முழுமுதற் கடவுளான கிருஷ்ணரின் வேண்டுகோளை அவன் புரிந்து கொள்ளவில்லை. இது சகவாச தோஷத்தால் ஏற்படுவது. அவனுக்கு எல்லா நலன்களையும் தருவதாக வாக்களித்த முழுமுதற் கடவுளுக்கு அவன் உடனே உடுப்பைக் கொடுத்திருக்கலாம். பாவாத்மாவான அந்த அரக்கன் மகிழ்ச்சியடைவதற்குப் பதிலாக அவன் கோபம் கொண்டு அரசனுக்குரிய ஆடையை நீ எப்படிக் கேட்கலாம்? என்று கேட்டான். பின் அவன் கிருஷ்ணருக்கு...

தையல்காரனுக்கு முக்தி வழங்குதல்

தையல்காரனுக்கு முக்தி வழங்குதல் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், கம்சனின் வேலையாளைச் சிரச்சேதம் செய்தபின் பலராமருடனும் அவர்களது கோபால நண்பர்களுடனும் மதுராவின் வீதிகளில் தொடர்ந்து சென்று கொண்டிருந்தபோது, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தனான தையல்காரன் ஒருவன் சில அழகிய ஆடைகளைத் தைத்துக் கொண்டு வந்தான். இவ்வாறு அழகாக உடுத்துக் கொண்ட கிருஷ்ணரும் பலராமரும் அழகிய வண்ண ஆடைகளைத் தரித்த யானைகளைப் போல் காட்சியளித்தார்கள். தையல்காரனின் செயல் கிருஷ்ணருக்கு மகிழ்ச்சியைத் தந்தது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவனுக்கு ஸாருப்ய முக்தி அளித்தார். அதாவது, அவன் உடலை நீத்தபின் வைகுண்டத்தில் நான்கு கைகளுடைய நாராயணரின் ரூபத்தைப் போன்ற வடிவத்தைப் பெற்றிருப்பான். அவன் வாழ்நாள் முழுவதும் புலனின்பங்களை நன்கு அனுபவிப்பதற்குத் தேவையான செல்வத்தைப் பெறுவானென்றும் கிருஷ்ணர் வரம் அருளினார். இந் நிகழ்ச்சியின் மூலம், கிருஷ்ண உணர்வுள்ள பக்தர்கள் இகவுலக இன்பங்களிலோ, புலன் திருப்தியிலோ குறைந்தவர்களாக மாட்டார்களென்பதைக் கிருஷ்ணர் நிரூபித்துக் காட்டினார். இவ்வுலகில் அவர்கள், இகவுலக வாழ்வை நீத்தபின் வைகுண்ட லோகம் அல்லது கிருஷ்ணலோகம், அ...

கூனியாக இருந்த பெண்ணை அழகிய இளம் பெண்ணாக மாற்றுதல்

 கூனியாக இருந்த பெண்ணை அழகிய இளம் பெண்ணாக மாற்றுதல் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் பூ வியாபாரியின் இடத்தை விட்டுச் சென்றபின், கூனுடைய ஒரு இளம் பெண் சந்தனக் குழம்பு நிரம்பிய ஒரு கோப்பையைத் தெருவில் எடுத்துச் செல்வதைக் கண்டார்கள். ஆனந்தத்தின் இருப்பிடமான கிருஷ்ணர் அந்தக் கூனியிடம் ஹாஸ்யமாகப் பேசித் தம் நண்பர்களை மகிழ்விக்க விரும்பினார். கிருஷ்ணர் அவளிடம் கூறினார்: உயர்ந்த இளம் பெண்ணே நீ யார்? யாருக்காக இச் சந்தனத்தை எடுத்துச் செல்கிறாய்? இதை நீ எனக்குத் தருவது பொருந்துமென நான் எண்ணுகிறேன். அவ்வாறு செய்தால் நிச்சயமாக உனக்கு நண்மை உண்டாகும். எனக் கூறினார். முழுமுதற் கடவுளான கிருஷ்ணர் அக் கூனியைப் பற்றிய எல்லா விபரங்களையும் அறிந்திருந்தார். அவளை அவ்வாறு கேட்டபோது, ஒரு அசுரனுக்குச் சேவை செய்வதில் பயனில்லை என்பதைக் குறிப்பால் உணர்த்தினார். அதைவிட கிருஷ்ணருக்கும் பலராமருக்கும் சேவை செய்தால் பாவங்களெல்லாம் களையப் பெறலாம். அந்தப் பெண் கிருஷ்ணரிடம் கூறியதாவது: அன்புள்ள சியாம சுந்தரா, நான் கம்சனின் வேலைக்காரி. அவருக்கு நான் தினமும் சந்தனம் தயாரித்து அளித்து வருகிறேன். இவ்வளவு நேர்த...

யாகமேடையில் வில்லை முறித்தல்

யாகமேடையில் வில்லை முறித்தல் கம்சன் தனுர் யாகத்திற்கு ஏற்பாடு செய்திருந்தான். இந்த யாகத்தின் நோக்கத்தைக் குறிப்பால் உணர்த்துவதற்காக கம்சன் யாக பீடத்தினருகில் மாபெரும் வில் ஒன்றை வைத்திருந்தான். அந்த வில் மிகப் பெரிதாகவும், அதிசயமாகவும், வானவில்லைப் போன்றதாகவும் இருந்தது. யாகப் பிரதேசத்தினுள் அந்த வில் கம்சனால் நியமிக்கப்பட்ட காவலர்களின் பாதுகாப்பில் இருந்தது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் வில்லின் அருகில் சென்றபோது, காவலர்கள் அவர்களை எச்சரித்தார்கள். ஆனால் கிருஷ்ணர் அதைச் சட்டை செய்யவில்லை. அவர் பலவந்தமாக உள்ளே சென்று வில்லைத் தனது இடது கையில் எடுத்தார். அங்கு குழுமியிருந்த மக்களின் முன்பு கிருஷ்ணர் வில்லில் நாணை ஏற்றி, வில்லை வழைத்து இரு பகுதிகளாக, யானை கரும்பை ஒடிப்பது போல் ஒடித்தார். கிருஷ்ணரின் சக்தியை மக்கள் வியந்து பாராட்டினார்கள். வில் ஒடிந்த போது எழுந்த ஒலி பூமியிலும் ஆகாயத்திலும் எங்கும் எதிரொலித்தது. அந்த ஒலியைக் கம்சனும் கேட்டான். நடந்ததை அறிந்தபோது அவன் தன் உயிருக்காக அஞ்சினான். வில்லைக் காவல் காத்தவன் மிகுந்த கோபமடைந்து, கிருஷ்ணரைப் பிடிக்குமாறு ஏவலர்களுக்...

குவாலயபீட யானையைக் கொல்லல்

குவாலயபீட யானையைக் கொல்லல் கம்சன் தனுர் யாகத்திற்கு ஏற்பாடு செய்திருந்தாலும் அதற்கு முன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரையும் பலராமரையும் கொல்வதுதான் கம்சனின் திட்டம். எனவே அவன் அடுத்தகட்ட நடவடிக்கையாக மல்யுத்தப் போட்டி ஒன்றிற்கான ஏற்பாட்டைச் செய்தான். மல்யுத்தக் களம் நேர்த்தியாகத் துப்பரவு செய்யப்பட்டு கொடிகளாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப் பட்டிருந்தது. போட்டி நடக்கவிருந்ததைப் பறையடித்து அறிவித்தார்கள். அரசர்கள், பிராமணர்கள், சத்திரியர்கள் என்று பல் வேறான உயர் பிரிவினருக்குத் தனியான ஆசனங்கள் அமைக்கப் பட்டிருந்தன. இறுதியில் கம்சன் வந்து சேர்ந்தான். அவனுடன் பல மந்திரிகளும், பிரதானிகளும், காரியஸ்தர்களும் வந்து அமர்ந்தார்கள். கம்சன் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்தான். எல்லா ஏற்பாடுகளும் நிறைவேறியபின் சபையின் முன் தம் திறமைகளைக் காட்ட வந்திருந்த மல்லர்கள் கோதாவுக்குள் இறங்கினார்கள். அவர்கள் பிரகாசமான ஆபரணங்களையும், ஆடைகளையும் அணிந்திருந்தார்கள். அவர்களுள் பிரசித்தி பெற்ற மல்லர்களான சாணூரன், முஷ்டிகன், சாலன், கூடன், தோசாலன் ஆகியவர்களும் இருந்தனர். kuvalayadipa நந்தரி...

மல்யுத்தப் போட்டியில் பல மல்லர்களைக் கொல்லுதல்

மல்யுத்தப் போட்டியில் பல மல்லர்களைக் கொல்லுதல் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் குவாலயபீட யானையைக் கொன்றபின் பலராமருடனும் நண்பர்களுடனும் மல்யுத்தக் களத்தினுள் பிரவேசித்தபோது பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் செய்த செயல்கள் பற்றி மக்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது மல்யுத்தப் போட்டி தொடங்க இருப்பதை அறிவிக்கும் வாத்ய முழக்கங்கள் அவர்களின் செவிகளில் விழுந்தன. பிரசித்தி பெற்ற மல்யுத்த வீரனான சாணூரன் கிருஷ்ணரிடமும் பலராமரிடமும் பேசினான்: அன்பான கிருஷ்ணா, பலராமா, உங்கள் முந்திய செயல்கள் பற்றி நாங்கள் கேள்விப் பட்டிருக்கிறோம். நீங்கள் பெரும் வீரர்கள். எனவே அரசர் உங்களை அழைத்துள்ளார். அரசரும் இங்கு கூடியுள்ளவர்களும் உங்களின் மல்யுத்த திறமைகளைக் கான ஆவலாயிருக்கிறார்கள். ஒரு குடிமகன் எப்போதும் அரசனின் மனதையறிந்து பணிவுடன் நடக்க வேண்டும். அவ்வாறு நடக்கும் குடிமகன் எல்லா நலன்களையும் பெறுவான். பணியாமல் நடப்பவன் அரசனின் கோபத்திற்கு ஆளாகித் துன்பம் அனுபவிக்கிறான். நீங்கள் ஆயர் குலச் சிறுவர்கள். பசுக்கள் மேய்க்கும்போது ஒருவரோடு ஒருவர் மல்யுத்தம் செய்து மகிழ்வதாகக் கேள்விப் பட்டிருக்கிறோம். எனவே எங்...

கம்சன் வதம்

கம்சன் வதம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும்; மல்யுத்தக் களத்தினுள் மாபெரும் மல்லர்கள் யாவரையும் கொன்றபின் எஞ்சியிருந்த மல்லர்கள் உயிருக்குப் பயந்து கோதாவை விட்டு ஓடினார்கள். கிருஷ்ணரின் நண்பர்களான ஆயர் குலச் சிறுவர்கள் அவரையும் பலராமரையும் அணுகி மிகுந்த மகிழ்ச்சியுடன் அவர்களின் வெற்றியைப் பாராட்டினார்கள். அங்கு கூடியிருந்த மக்கள் மகிழ்ச்சிப் பெருக்கால் கரவொலி எழுப்பினார்கள். அவர்களின் மகிழ்ச்சி கரை புரண்டோடியது. பிராமணர்கள் மனமுவந்து கிருஷ்ணரையும் பலராமரையும் புகழ்ந்து பேசினார்கள். கம்சன் மட்டும் வாளாவிருந்தான். அவன் கைதட்டவுமில்லை, கிருஷ்ணரையும் பலராமரையும் வாழ்த்தவுமில்லை. கிருஷ்ண பலராமரின் வெற்றியைப் பாராட்டும் வகையில் முரசுகள் ஒலித்ததை அவன் விரும்பவில்லை. மல்லர்கள் கொல்லப்பட்டதும் எஞ்சியவர்கள் உயிருக்குப் பயந்து ஓடியதும் அவனுக்கு மன வருத்த்தைத் தந்தது. அவன் உடனே முரசுகள் ஒலிக்கப் படுவதை நிறுத்தும்படி கட்டளையிட்டு, தன் நண்பர்களை நோக்கிப் பின் வருமாறு பேசினான்: வசுதேவரின் இந்த இரு மகன்களும் உடனடியாக மதுராவிலிருந்து விரட்டப்பட வேண்டுமென்று நான் கட்டளையிடுகிறேன். அவர்களுடன் வ...

கம்சனின் எட்டு சகோதரர்கள் கொல்லப்படுதல்

கம்சனின் எட்டு சகோதரர்கள் கொல்லப்படுதல் கம்சனுக்கு எட்டு சகோதரர்கள் இருந்தார்கள். அவர்களுள் மூத்தவர் கங்கர். எல்லோரும் கம்சனுக்கு இளையவர்கள். தம் மூத்த சகோதரனான கம்சன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் கொல்லப் பட்டதை அறிந்ததும் அவர்கள் ஒன்று கூடிப் பெருங் கோபத்துடன் கிருஷ்ணரைத் தாக்கிக் கொல்ல விரைந்தார்கள். கம்சனும் அவனின் சகோதரர்களும் கிருஷ்ணரின் தாய் மாமன்மார் ஆவார்கள். அதாவது தேவகியின் சகோதரர்கள். எனவே கிருஷ்ணர் கொன்றது தனது தாய்மாமனான கம்சனை. இது வேதப் பண்பாடுகளுக்குப் புறம்பானது. கிருஷ்ணர் வேதக் கட்டளைகளுக்கு அப்பாற் பட்டவரென்றாலும், தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மட்டும் அவர் வேதக் கோட்பாடுகளை மீறுகிறார். கம்சனை வேறு யாராலும் கொல்ல முடியாதாகையால் கிருஷ்ணர் அவனைக் கொல்ல வேண்டியதாயிற்று. கம்சனின் எட்டு சகோதரர்களைப் பொறுத்தவரை பலராமர் அவர்களைக் கொன்றார். பலராமரின் தாயாகிய ரோகிணி வசுதேவரின் மனைவியானாலும் கம்சனின் சகோதரி அல்ல. பலராமர் கைக்கெட்டிய ஆயதத்தைக் கொண்டு, சிங்கம், மான் கூட்டத்தை கொல்வது போல் கம்சனின் சகோதரர்களை ஒருவர் பின் ஒருவராகக் கொன்றார். இவ்வாறு கிருஷ்ணரும் பலராமரும், பகவத் ...

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் தம்மை குழந்தைகளாக வியாபித்தல்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் தம்மை குழந்தைகளாக வியாபித்தல் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் கம்சனை வதம் செய்துவிட்டு, கம்சனின் சகோதரர்கள் கொல்லப்பட்டதன் பின் கம்சனால் சிறைப்படுத்தப் பட்டிருந்த தம் தாய் தந்தையரான வசுதேவரையும் தேவகியையும் விடுவித்தார்கள். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் அவர்களின் பாதங்களில் விழுந்து நமஸ்கரித்தார்கள். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவர்களின் மகனாகப் பிறந்த காரணத்தால் அவர்கள் மிகுந்த தொல்லைகளுக்கு உள்ளாக நேரிட்டது. ஏனெனில் தேவகியின் எட்டாவது குழந்தை கம்சனைக் கொல்லும் என்று வசுதேவர், தேவகியின் திருமண ஊர்வலத்தன்று ஆகாயத்திலிருந்து அசரீரி கூறிற்று. அதன் காரணமாகவே கம்சன் அவர்களைத் துன்புறுத்தினான். தேவகியும் வசுதேவரும் கிருஷ்ணர் முழுமுதற் கடவுள் என்பதை நன்கு அறிந்திருந்தார்கள். எனவே கிருஷ்ணர் அவர்களின் பாதங்களைத் தொட்டு வணங்கினாலும் அவர்கள் அவரைத் தழுவிக் கொள்ளாமல் முழுமுதற் கடவுள் சொல்வதைக் கேட்பதற்கு ஆவலாய் நின்றிருந்தார்கள். வசுதேவரும் தேவகியும் மிகுந்த மரியாதையுடன் நின்று கொண்டிருந்ததைக் கண்ட பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், அவர்கள் தம்மையும் பலராமரையும் கு...