Posts

சகடா சூரவதம்

சகடா சூரவதம் குழந்தை கிருஷ்ணர் சற்று வளர்ந்த பின், குப்பிறப்படுக்கத் துவங்கினார். மற்றொரு விழாவை யசோதாவும் நந்தமகாராஜாவும் கொண்டாடினார்கள், அது கிருஷ்ணரின் முதலாவது பிறந்தநாள் விழாவாகும். அவர்கள் கொண்டாடிய கிருஷ்ண ஜெயந்தி விழா, இன்றும் அனைவராலும் கொண்டாடப்படுகிறது. அவ்விழாவுக்கு பெருந்திரளானவர்கள் வந்து விழாவில் குதூகலமாக கலந்துகொண்டனர். நேர்த்தியான வாத்தியக்குழு ஒன்று இசை பொழிய, கூடியிருந்த மக்கள் அதை ரசித்தனர். கற்றறிந்த பண்டிதர்கள் எல்லோரும் விழாவுக்கு அழைக்கப் பட்டிருந்தனர். பிராமணர்களான அவர்கள், கிருஷ்ணரின் நன்மை கருதி வேத பாராயணம் செய்தார்கள். யசோதை, நீராட்டப்பட்டு, அழகிய ஆடைகளால் அலங்கரிக்கப் பட்டிருந்த குழந்தை கிருஷ்ணரை மடியில் வைத்துக் கொண்டிருக்கும்போது, குழந்தை தூங்குவதுபோல் தோன்றியதால், அன்னை யசோதை அவரைப் படுக்கையில் கிடத்தினாள். உறவினர்களையும் நண்பர்களையும் அந்த சுபவேளையில் வரவேற்கும் பணியில் ஈடுபட்டிருந்ததால் யசோதை, குழந்தைக்கு பாலூட்ட மறந்து போனாள். எனவே, அவர் பசித்திருந்ததால் அழத் தொடங்கினார். அங்கே ஏற்பட்டிருந்த பற்பல ஓசைகளின் காரணமாக குழந்தை அழுதது, யசோதையின் கா...

குழந்தை ஸ்ரீ கிருஷ்ணர் தன் திருவாயில் பிரமாண்டங்களைக் காண்பித்தல்

குழந்தை ஸ்ரீ கிருஷ்ணர் தன் திருவாயில் பிரமாண்டங்களைக் காண்பித்தல் பலராமரும் கிருஷ்ணரும் குழந்தைகளாக இருந்தபோது, ஒருநாள் தம் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, எல்லாச் சிறுவர்களும் ஒன்றுகூடி அன்னை யசோதையிடம் வந்து, கிருஷ்ணர் மண்ணைத் திண்றுவிட்டதாக புகார் செய்தனர். இதைக்கேட்ட யசோதை, கிருஷ்ணரது வாயைத் திறக்குமாறு கூறினாள். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், அவரின் அன்னையான யசோதை அவ்வாறு பணித்தவுடன், அவர் ஒரு சாதாரண சிறுவன் செய்வதுபோல் தன் திருவாயைத் திறந்தார். அப்போது அன்னை யசோதை, தன் மகனின் திருவாயினுள் படைப்பின் முழுச்சிறப்பையும் கண்டாள். எல்லா திசைகளிலும் விரிந்திருந்த விண்வெளி, மலைகள், தீவுகள், சமுத்திரங்கள், கிரகங்கள், காற்று, நெருப்பு, சந்திரன், நட்சத்திரங்கள், முழுப் படைப்பின் பல்வேறான வடிவங்கங்கள் மற்றும் பிரபஞ்சப் படைப்புக்குத் தேவையான எல்லாம் தன் குழந்தையின் வாயினுள் இருப்பதைக் கண்டாள். அத்துடன் யசோதை கிருஷ்ணரைத் தன் மடியில் வைத்துக்கொண்டு அவருக்குப் பாலூட்டுவதையும் அந்த வாயினுள் கண்டு வியந்தாள். பகவானுடைய கிருபையால் மீண்டும் பழைய நிலையை அடைந்து தன் அன்புக் குழந்தையை தழ...

குழந்தை ஸ்ரீ கிருஷ்ணர் தன் திருவாயில் பிரமாண்டங்களைக் காண்பித்தல்

குழந்தை ஸ்ரீ கிருஷ்ணர் தன் திருவாயில் பிரமாண்டங்களைக் காண்பித்தல் பலராமரும் கிருஷ்ணரும் குழந்தைகளாக இருந்தபோது, ஒருநாள் தம் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, எல்லாச் சிறுவர்களும் ஒன்றுகூடி அன்னை யசோதையிடம் வந்து, கிருஷ்ணர் மண்ணைத் திண்றுவிட்டதாக புகார் செய்தனர். இதைக்கேட்ட யசோதை, கிருஷ்ணரது வாயைத் திறக்குமாறு கூறினாள். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், அவரின் அன்னையான யசோதை அவ்வாறு பணித்தவுடன், அவர் ஒரு சாதாரண சிறுவன் செய்வதுபோல் தன் திருவாயைத் திறந்தார். அப்போது அன்னை யசோதை, தன் மகனின் திருவாயினுள் படைப்பின் முழுச்சிறப்பையும் கண்டாள். எல்லா திசைகளிலும் விரிந்திருந்த விண்வெளி, மலைகள், தீவுகள், சமுத்திரங்கள், கிரகங்கள், காற்று, நெருப்பு, சந்திரன், நட்சத்திரங்கள், முழுப் படைப்பின் பல்வேறான வடிவங்கங்கள் மற்றும் பிரபஞ்சப் படைப்புக்குத் தேவையான எல்லாம் தன் குழந்தையின் வாயினுள் இருப்பதைக் கண்டாள். அத்துடன் யசோதை கிருஷ்ணரைத் தன் மடியில் வைத்துக்கொண்டு அவருக்குப் பாலூட்டுவதையும் அந்த வாயினுள் கண்டு வியந்தாள். பகவானுடைய கிருபையால் மீண்டும் பழைய நிலையை அடைந்து தன் அன்புக் குழந்தையை தழு...

நளகூவரன் மற்றும் மணிக்கிரீவன் சாப விமோசனம்

நளகூவரன் மற்றும் மணிக்கிரீவன் சாப விமோசனம் வெண்ணெய் திருடி, தயிர் பானையை உடைத்த கண்ணனை, தாய் யசோதை உரலில் கட்டினாள். மகனைக் கட்டிப் போட்டுவிட்டு அன்னை யசோதை வீட்டு வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினாள். அவ்வாறு மர உரலில் கட்டப்பட்டிருந்த கிருஷ்ணர், தன் முன் இரண்டு அர்ஜுன மரங்கள் நிற்பதைக் கவனித்தார். இந்த இரண்டு அர்ஜுன மரங்களும் பிரபலமான தேவர்களான நளகூவரனும் மணிக்கிரீவனும், தேவர்களின் பொக்கிஷதாரனும் சிவபெருமானின் பெரும் பக்தனுமான குவேரனின் இரு மகன்கள் ஆவார்கள். குவேரனின் இவ்விரு மைந்தர்களும் மது, மாது விடயங்களில் நாடியிருந்தனர். ஒரு முறை நாரதர் முன் இவ்விருவரும் இழி நிலையிலிருந்ததால் அவர்கள் இருவர் மீதும் கருணை கொண்டு, அவர்கள் நற்கதி அடைய வேண்டும் என்பதற்காக அவ்விருவரும் மரங்களாக, தேவர்களின் காலக் கணக்கின்படி நூறு ஆண்டுகளுக்கு இருந்து, பின்னர் முழுமுதற் கடவுளை நேருக்கு நேர் கண்டு நற்பேறு அடைய வேண்டுமென்று நாரதரால் சபிக்கப்பட்டிருந்தார்கள். அந்த இரு தேவர்களும் இரட்டை அர்ஜுன மரங்கள் என்று பெயர் பெற்ற மரங்களாக மாறி, நந்த மகாராஜாவின் அரண்மனை முற்றத்தில் தோன்றி வளாந்து, ஸ்ரீ கிருஷ்ணரை ...

பழக்காரிக்கு அனுக்கிரகம்

பழக்காரிக்கு அனுக்கிரகம் ஒரு நாள் ஒரு பழக்காரி நந்தகோபரின் வாயிலுக்கு வந்தாள். “பழம் வேண்டியவர்கள் வந்து வாங்கிக் கொள்ளலாம்” என்று அவள் கூவியதைக் கேட்ட குழந்தை கிருஷ்ணர், சிறிது தானியத்தைக் கையில் எடுத்துக் கொண்டு பழம் வாங்க சென்றார். அக்காலத்தில், கொடுக்கல் வாங்கல் பண்டமாற்று முறையில் நடைபெற்றது. அவரின் தாய் தந்தையர் அவ்வாறு பண்டமாற்றம் செய்ததைக் கவனித்திருந்து அவரும் அப்படியே செய்ய முற்பட்டார். ஆனால் அவரின் கைகள் மிகவும் சிறியவையாக இருந்ததால், தானியங்கள் கீழே சிதறின. இதைக் கண்ட பழக்காரி, குழந்தை கிருஷ்ணரின் அபார அழகில் மனதைப் பறிகொடுத்து, அவர் கையிலிருந்த தானியத்தின் அளவைப் பற்றிக் கவலைப்படாமல் பழங்களைக் கை நிறையக் குழந்தை கிருஷ்ணருக்கு கொடுத்தாள். அதே சமயத்தில் அப்பழக்காரியின் கூடை முழுவதும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அருளால், ஆபரணங்களாலும், பொன்னாலும் மணியாலும் நிறைந்து விட்டது. உண்மையான அன்பும் பாசமும் நிறைந்த, உள்ளத்தால் கொடுக்கப்பட்ட பழங்களுக்காக பகவான் அவளுக்கு செல்வம் கொடுத்து அனுக்கிரகித்தார்.

பகாசுர வதம்

பகாசுர வதம் ஆயர் குலச் சிறுவர்கள் எல்லோரும் தினமும் கன்றுகளுக்குத் தண்ணீர் காட்டுவதற்காக அவைகளை யமுனை நதிக்கரைக்கு அழைத்துச் செல்வது வழக்கம். கன்றுகள் யமுனை நதியில் தண்ணீர் குடிக்கும்போது சிறுவர்களும் நீர் அருந்துவார்கள். அவ்வாறு ஒரு நாள் நீர் அருந்திவிட்டு நதிக்கரையில் அவர்கள் அமர்ந்திருந்தபோது, உருவத்தில் வாத்தைப் போலவும், ஆனால் மலைபோல் பெரியதுமான ஒரு மிருகத்தைக் கண்டனர். அதன் அசாதாரன வடிவத்தைக் கண்டு அவர்கள் பயந்து போனார்கள். கம்சனின் நண்பனான அம்மிருகத்தின் பெயர் பகாசுரன் ஆகும். அவன் திடீரென்று கிருஷ்ணரைத் தன் கூரிய அலகுகளினால் தாக்கி, வேகமாக விழுங்கினான். கிருஷ்ணரை அரக்கன் விழுங்குவதைக் கண்ட பலராமரும் அவரது தோழர்களும் என்ன நடக்கப் போகிறதோ என்று பயந்துவிட்டார்கள். ஆனால் பகாசுர அரக்கன் ஸ்ரீ கிருஷ்ணரை விழுங்கியபோது தொண்டையில் ஏதோ எரிவது போல் உணர்ந்தான். பகவான் ஸ்ரீ கிருஷ்ஷரின் ஒளிமிகு சக்தியினாலேயே அரக்கனின் தொண்டையில் அவ்வாறு எரிச்சல் ஏற்பட்டது. உடனே அரக்கன் கிருஷ்ணரை வெளியில் உமிழ்ந்துவிட்டு, தன் கூரிய அலகுகளால் அவரைக் குத்திக் கொல்ல முயன்றான். அப்போது பகவான் ஸ்ரீ கிருஷ்ணர...

அகாசுர வதம்

அகாசுர வதம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தம் தோழர்களுடன் பால்ய லீலைகளில் திளைத்திருந்த போது, அகாசுரன் என்ற அரக்கன் மிகவும் பொறுமை அற்று இருந்தான். கிருஷ்ணர் விளையாடியதை அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எனவே, அந்தச் சிறுவர்கள் எல்லோரையும் கொல்லும் எண்ணத்துடன், அவன் அவர்களின் முன்பு தோன்றினான். வானுலகத்தினர் எல்லோரும் பயப்படும் அளவிற்கு அவன் பயங்கரமான தோற்றம் உடையவனாக இருந்தான். அகாசுரன் என்ற அந்த அரக்கன் பூதகி மற்றும் பகாசுரனின் சகோதரன் ஆவான். கிருஷ்ணர், தன் சகோதரனையும் சகோதரியையும் கொன்றதற்கு பழி வாங்குவற்காக, கிருஷ்ணரையும் அவரது நண்பர்களையும் கன்றுகளையும் கொல்ல வேண்டுமென்று வந்தான். அவன் கம்சனின் நண்பனும் ஆவான். உடனே அசுரன், மஹிமா எனும் யோக சக்தியின் உதவியால் தன் உருவத்தை எட்டு மைல் அளவுக்குப் பெரிதாக்கிக் கொண்டு, மிகவும் பெரிய உடலை உடைய பாம்பின் வடிவத்தை எடுத்தான். அந்த அதிசய உடலை எடுத்தவுடன், தனது வாயை ஒரு பெரிய மலைக்குகையின் அளவிற்குத் திறந்தான். ஒரே சமயத்தில் கிருஷ்ணரையும் பலராமரையும் மற்றைய சிறுவர்களையும் சேர்த்து விழுங்கத் திட்டமிட்டான். மிப்பெரிய பாம்பின் உருவத்தை மேற்கொண்ட...